
District News
நாகர்கோவிலில் இருந்து மணவாளக்குறிச்சி வந்த பஸ் பழுதாகி ரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவிலில் இருந்து மணவாளக்குறிச்சி வந்த பஸ் பழுதாகி ரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
16-04-2014
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மணவாளக்குறிச்சிக்கு நேற்று காலை 9.30 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த பஸ் நாகர்கோவில் புனித சவேரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று பழுதாகி நடுரோட்டில் நின்றது. காலையில் அனைவரும் அலுவலகம் செல்லும் நேரம் என்பதால் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதது. மேலும் இந்து கல்லூரி ரோட்டிலும் வாகனங்கள் நின்றதது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழுதான பஸ்சை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினர். தொடர்ந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.
0 Comments: