Headlines
கடியப்பட்டணத்தில் வக்கீலை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு

கடியப்பட்டணத்தில் வக்கீலை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு

கடியப்பட்டணத்தில் வக்கீலை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு
16-04-2014
நாகர்கோவில் கோர்ட்டில் பணியாற்றி வருபவர் கிறைஸ்ட் மில்லர் (வயது 50) இவருக்கு சொந்தமான நிலம் கடியப்பட்டணம் குழந்தை இயேசு காலனியில் உள்ளது. நேற்று முன்தினம் அவர் அங்கு மரக்கன்றுகளை நட்டு கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த அலெக்சாண்டர், எஸ்கிலின், கிரேசி, செல்வம், ராணி உள்பட 50 பேர் ஆயுதங்களுடன் அங்கு திரண்டு வந்ததாக தெரிகிறது.

அவர்கள் வக்கீலை சரமாரியாக தாக்கியதாகவும், அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மில்லர் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதைதொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 50 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: