Headlines
Loading...
மணவாளக்குறிச்சி மகான் பட்டாணி சாஹிப் தர்ஹாவுக்கு தகரக்களியுடன் பிறைக்கொடி ஊர்வலம்

மணவாளக்குறிச்சி மகான் பட்டாணி சாஹிப் தர்ஹாவுக்கு தகரக்களியுடன் பிறைக்கொடி ஊர்வலம்

மணவாளக்குறிச்சி மகான் பட்டாணி சாஹிப் தர்ஹாவுக்கு தகரக்களியுடன் பிறைக்கொடி ஊர்வலம்
30-04-2014
மணவாளக்குறிச்சி ஆசாரிமார்தெருவில் மகான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஹிஜ்ரி வருடமும் ரஜப் மாதம் முதல் தேதியில் கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து 10 நாட்கள் விழா மணவாளக்குறிச்சி முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த வருட விழா நிகழ்வுகள் இன்று முதல் (ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 1 முதல் 10) முடிய நடைபெறுகிறது. இன்று இரவு 7 மணி அளவில் தர்ஹா வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. பிறைக்கொடி ஊர்வலத்தில் முஸ்லிம் முஹல்ல மதரஸா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் களியக்காவிளை பழைய உச்சக்கடை சேர்ந்த தகரக்களி குழுவினரும் சென்றனர்.
பிறைக்கொடி ஊர்வலம் மணவாளக்குறிச்சி தொழுகை பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து துவங்கி பீச்ரோடு, காணவிளை, ஆரான்விளை, காந்தாரிவிளை, தேங்காய்கூட்டுவிளை, தருவை, மணவாளக்குறிச்சி சந்திப்பு, காந்திநகர், ஆசாரிதெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று, முடிவில் தர்ஹாவை அடைந்தது. அங்கு கொடியேற்றப்பட்டது. தினமும் இரவு மௌலூது ஓதப்பட்டு நேர்ச்சை வழங்கப்படுகிறது. 10-ஆம் நாள் விழாவில் ஞானபுகழ்ச்சி பாடப்படுகிறது.
கொடி ஊர்வலத்தில் மணவாளக்குறிச்சி முஹல்ல தலைவர் ஹல்பா பசீர், முஹல்ல பொருளாளர் அப்துல் சலாம், சேமக்கண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: