
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை – திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை – திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்
08-03-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா மார்ச் 2-ம் தேதி தொடக்கி 11-ம் தேதி வரை நடக்கிறது. 6-ம் நாள் திருவிழாவான நேற்று வலியபடுக்கை பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
நேற்று காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்வும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு சமய மாநாடு நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்ற மகா பூஜை நடந்தது. இந்த பூஜை ஆண்டிற்கு 3 முறை மட்டுமே நடைபெறும். மாசி கொடை விழா 6-ம் நாள், மீனபரணி கொடை விழா, கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் நடைபெறும்.
சிறப்பு வாய்ந்த இந்த பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, திரளி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினைமாவு, தேங்காய், பழங்கள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு வகைகள் படைக்கப்பட்டன. பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments: