Headlines
Loading...
மணவாளக்குறிச்சியில் அதிகாலையில் போலீசாரிடம் சிக்கிய காதல் ஜோடியால் பரபரப்பு

மணவாளக்குறிச்சியில் அதிகாலையில் போலீசாரிடம் சிக்கிய காதல் ஜோடியால் பரபரப்பு

மணவாளக்குறிச்சியில் அதிகாலையில் போலீசாரிடம் சிக்கிய காதல் ஜோடியால் பரபரப்பு
05-01-2014
குளச்சல் நெடுஞ்சாலைதுறை போலீசார் நேற்று அதிகாலை மணவாளக்குறிச்சி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அதிகாலை 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ரோந்து சென்றபோது ஒரு இளம் ஜோடி பஸ் நிலையம் அருகே வள்ளியாற்று பகுதியில் உட்கார்ந்திருந்தனர்.

இதை பார்த்த போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரித்தனர்.இந்த நேரத்தில் இங்கு ஏன் அமர்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த வாலிபர் கடியப்பட்டணத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.அவருடன் இருந்த பெண், பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்பதும், அவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.
இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி அப்பகுதிக்கு வந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.மேலும் அந்த காதல் ஜோடியை மணவாளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் காதல் ஜோடிக்கு அறிவுரை கூறி எழுதி வாங்கி கொண்டு, அவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: