சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே சிப்பிமீன் எடுக்கும்போது கடலில் மூழ்கி மீனவர் பலி
மணவாளக்குறிச்சி அருகே சிப்பிமீன் எடுக்கும்போது
கடலில் மூழ்கி மீனவர் பலி
05-01-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் சூசை (வயது 65). இவர் கீழகடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த தேவதாசன் என்பவருக்கு சொந்தமான கட்டுமரத்தில் நேற்று காலை 10.30 மணி அளவில் கடலுக்கு சென்றார்.
அங்கு கடலுக்குள் பாறையில் ஒட்டியிருந்த சிப்பி மீன்களை சூசையும், தேவதாசனும் வெட்டி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது சூசை சிப்பிமீன்களை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கடலில் மூழ்கினார். அவரை தேவதாசனால் காப்பாற்ற முடியாமல் போனது.
சிறிது நேரத்தில் சூசை கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து தேவதாசன் குளச்சல் கடலோர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி ராமன் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
0 Comments: