சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சிக்கு அருகே சுற்றுலா வந்த மாணவன் குளத்தில் மூழ்கி சாவு
மணவாளக்குறிச்சிக்கு அருகே சுற்றுலா வந்த மாணவன்
குளத்தில் மூழ்கி சாவு
27-12-2013
சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் பிரபாகரன் (வயது 14). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அருகில் உள்ள டியூசன் சென்டரில் டியூசன் படித்து வந்தார்.தற்போது பள்ளி விடுமுறை என்பதால் டியூசன் ஆசிரியர்கள் 2 பேரும், அங்கு டியூசன் படித்த பிரபாகரன் உள்பட 5 மாணவர்களும் குமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 25-ம் தேதி சுற்றுலா வந்தனர்.
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர்கள் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியகுளம் சென்றனர்.3 மாணவர்கள் குளத்தில் இறங்கி குளித்தனர். அப்போது நீச்சல் தெரியாத பிரபாகரன் தண்ணீரில் மூழ்கினார்.உடனே அவரை காப்பாற்றி அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு பிரபாகரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுபற்றி சென்னையில் உள்ள பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.பிரபாகரனின் தாயார் ஜமுனா இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.மணவாளக்குறிச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மோகன் விசாரணை நடத்தி பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
0 Comments: