மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி, சின்னவிளை பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்
மணவாளக்குறிச்சி, சின்னவிளை பகுதிகளில்
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்
27-12-2013
மணவாளக்குறிச்சி பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ம் தேதி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. மணவாளக்குறிச்சி புதுத்தெரு சி.எஸ்.ஐ. ஆலயம், படர்நிலம் புனித பத்தாம்பத்தி ஆலயம், பெரியவிளை ஆலயம், சின்னவிளை புனித அந்தோனியார் ஆலயம் ஆகிய கிறிஸ்தவ ஆலயங்கள் விளக்குகள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மணவாளக்குறிச்சியில் கட்டப்பட்ட பிரமாண்ட குடில் |
மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி அருகில் சுமார் 1.5 இலட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட குடில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த குடிலை ஆல்பர்ட், இல்பர்ட் மற்றும் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து செய்திருந்தனர். குடிலை மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோசப்பின் ரீட்டா திறந்து வைத்தார்.
சின்னவிளை கடற்கரையில் டிசம்பர் தினத்தன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செண்டை மேளங்கள் முழங்க இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சின்னவிளை பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது, அனைத்து சமுதாய மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கிறிஸ்தவ மக்கள் வள்ளம் மற்றும் படகுகளில் கடலில் குதூகல பயணம் சென்றனர். படகுகளில் பெரிய ஸ்பீக்கர்கள் கட்டி பாடல்கள் போடப்பட்டு இருந்தது. அதில் சென்றவர்கள் ஆடி, பாடி சென்றனர். ஏராளமானோர் கடலில் குளித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை மிக மகிழச்சியுடன் கொண்டாடினர்.
போட்டோஸ்: புதியபுயல் முருகன்
0 Comments: