சுற்றுவட்டார செய்திகள்
கடியப்பட்டணம், முட்டம் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்
கடியப்பட்டணம், முட்டம் பகுதியில்
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்
27-12-2013
உலகமெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாப்படும் முக்கிய பண்டிகை கிறிஸ்துமஸ் ஆகும். இந்த பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் 25-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம், முட்டம் ஆகிய பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கடியப்பட்டணம் புதிய ராயப்பர், சின்னப்பர் பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊர்மக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி கலந்து கொண்டனர். பிரார்த்தனை முடிவில் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
கடியப்பட்டணத்தில் கட்டப்பட்ட குடில் |
கடியப்பட்டணம் பகுதியில் பல இடங்களில் குடில்கள் கட்டப்பட்டும், அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.
இதேபோல் முட்டம் சகல புனிதர் பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 12 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை துவங்கியது. ஆலயத்தின் முன்பகுதியில் பெரிய அளவிலான குடில் கட்டப்பட்டிருந்தது. முட்டம் கிராமம் முழுவதுமே அலங்கார விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முட்டம் சகல புனிதர் ஆலயத்தின் அழகிய தோற்றம் |
போட்டோஸ்: மணவை முருகன்
0 Comments: