
District News
Surrounded Area
ஆலஞ்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
ஆலஞ்சியில் மழைநீர் சேகரிப்பு
விழிப்புணர்வு பேரணி
08-08-2013
பாலப்பள்ளம் பேரூராட்சி சார்பில் ஆலஞ்சி புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில் பாலப்பள்ளம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏசுபாலன், தலைவர் கில்டா ரமணிபாய், துணைத்தலைவர் மோகன் சந்திரகுமார், புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புனித பிரான்சிஸ் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மழைநீர் விழிப்புணர்வு பற்றிய பனியன்கள் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது. மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
0 Comments: