Headlines
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவையின் ரம்சான் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய விபரம்

மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவையின் ரம்சான் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய விபரம்

மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவையின்
ரம்சான் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய விபரம்
04-08-2013
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவையின் ஈகை பெருநாள் இனிய தின பெருவிழா மற்றும் பேரவையின் 28 வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
சவுக்கத் அலி உஸ்மானி, தொல்.திருமாவளவன்
மற்றும் அளூர் ஷாநவாஸ்
ஈகை பெருநாள் நிகழ்ச்சிகள் வருகிற 10 மற்றும் 11ஆம் தேதிகளில் (ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 2, 3) ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. 10- ம் தேதி இரவு 8 மணிக்கு முதல் நாள் நிகழ்ச்சியில் இளைஞர் பேரவை கவுரவ தலைவர் சபீக் ரகுமான் தலைமையும், முஹம்மது யூசுப் வரவேற்புரையும், உதவி செயலாளர் நூருல் அமீன் ஹைதர் அலி ஆகியோர் முன்னிலையும் வழங்குகிறார்கள். 

மன்ற அறிக்கையை அப்துல் முனீர், துவக்கவுரையை இமாம் முசம்மில் கான் பைஜூ ஆகியோர் வழங்குகிறார்கள். மார்க்க பேருரை நாகர்கோவில் கலாச்சார கழக தலைமை இமாம் மௌலவி சவுக்கத் அலி உஸ்மானி வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

11ம் தேதி இரவு 8 மணிக்கு 2-ம் நாள் நிகழ்ச்சி துவங்குகிறது. நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய இளைஞர் பேரவையின் முன்னாள் செயலாளர் முஹம்மது முபீன் தலைமை தாங்குகிறார். கிராஅத் துணைத்தலைவர் காசிம் ஓதுகிறார்.

முஸ்லிம் முஹல்ல பொருளாளர் அப்துல் சலாம், செயற்குழு உறுப்பினர் பதர்சமான், இளைஞர் பேரவை தலைவர் அனீப் ரஹ்மான் முன்னிலை வகிக்கின்றனர். இமாம் முஹம்மது ஜெலீல் உஸ்மானி மற்றும் பிரபல எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் துவக்கவுரை வழங்குகிறார்கள். வாழ்த்துரை தலைவர் பஷீர் வழங்குகிறார். சிறப்புரை எழுச்சி தமிழன் தொல் திருமாவளவன் வழங்குகிறார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

1 comment

  1. மணவை இன்போ ரசிகர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete