
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர கூரை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில்
அமைக்கப்பட்டுள்ள நிரந்தர கூரை
28-02-2013
குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் பிரசித்திபெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து வரும்போதும், கோவில் பிரகாரத்தில் பொங்கலிடும் போதும் கடும் வெயிலினால் சிரமப்பட்டனர். எனவே இங்கு மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது கோவிலில் மாசி கொடை விழா தொடங்குவதை முன்னிட்டு கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுற்றுப்பிரகாரத்தில் மேற்கூரை அமைக்கும் பணியும் நடந்தது.
இதனால் கோவில் வளாகத்தில் பொங்கலிடும் பக்தர்கள் தற்காலிகமாக கோவிலின் எதிர்புறம் உள்ள சாலை மற்றும் சுற்றுபுறத்தில் உள்ள சாலையில் பொங்கலிட்டனர். இந்த நிலையில் கோவிலின் சுற்றுபிரகாரத்தில் நிரந்தர மேற்கூரை அமைக்கும் பணி பெருமளவு முடிந்தது. இன்னும் 3 நாட்களில் இந்த பணி முழுமையாக முடிந்து விடும் என தெரிகிறது.
நிரந்தர மேற்கூரை அமைக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
0 Comments: