
குமரிமாவட்ட செய்திகள்
கணபதிபுரம் அருகே பிளஸ்-2 மானவர் தூக்குபோட்டு தற்கொலை
கணபதிபுரம் அருகே பிளஸ்-2 மானவர் தூக்குபோட்டு தற்கொலை
ஆசிரியர் மீது வழக்கு
06-03-2013
கணபதிபுரம் அருகே உள்ள தெக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரபாலன். இவரது மகன் மகேஷ் என்ற ஜெயகுமார் (வயது 18). இவர் கணபதிபுரத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது நடைபெற்று வரும் பொதுதேர்விலும் பங்கேற்று தேர்வு எழுதினார்.
இந்நிலையில் அவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை கிண்டல் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி ஆசிரியர் ஒருவர் ஜெயகுமாரின் வீட்டுக்கு சென்று அவருடைய தந்தையிடம் புகார் கூறினார். இதை அறிந்து அவமானப்பட்ட ஜெயகுமார், வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார்.
உயிருக்கு போராடிய அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து இராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. மாணவர் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments: