
குமரிமாவட்ட செய்திகள்
திங்கள்நகரில் திருச்செந்தூருக்கு சென்ற பறக்கும்காவடி, சூரியகாவடி பவனி
திங்கள்நகரில் திருச்செந்தூருக்கு சென்ற
பறக்கும்காவடி, சூரியகாவடி பவனி
17-02-2013
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து குளச்சல் பகுதியில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்வதற்காக 10 கோவில்களில் விரதம் இருந்து சென்ற பக்தர்கள் காவடிகளுடன் நேற்று திங்கள்நகரில் குவிந்தனர்.
இந்த பவனியின் எண்ணை காவடி, ஒரு அடிவேல், ஆறு அடிவேல், புஷ்பகாவடி, சூரிய காவடி, பறக்கும் காவடி, அக்னி காவடி, தேர்காவடி உள்பட பல்வேறு காவடிகள் சென்றன. இதை காண ஏராளமானோர் திங்கள்நகரில் குவிந்தனர். மாலை சுமார் 4.30 மணியில் இருந்து இரவு 7.15 மணி வரை காவடிகள் ஊர்வலம் சென்றன. பின்னர் இரணியல் சென்று அங்கிருந்து திருச்செந்தூர் சென்றது.
காவடி பவனி வீடியோ-1
காவடி பவனி வீடியோ-2
0 Comments: