
குமரிமாவட்ட செய்திகள்
மருத்துவ கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக வழக்கு: ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு
மருத்துவ கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக வழக்கு:
போலீசார் மீட்டு ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு
10-02-2013
என்ஜினியரிங் மாணவியுடன் குடும்பம் நடத்தி வரும் வாலிபர், மருத்துவ கல்லூரி மாணவியை கடத்தியதாக தொடர்ந்த வழக்கில், அந்த மாணவியை போலீசார் மீட்டு ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள காந்தாரிவிளையை சேர்ந்தவர் அன்சாரி. இவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள ஹேபியஸ் கார்பஸ் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
என் மகள் நசீலா பீவி (வயது 22), குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 24-02-2013 முதல் அவரை காணவில்லை. விசாரித்த போது, மணவாளக்குறிச்சி ஆறான்விளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் என் மகளை கடத்தி சென்றது தெரிய வந்தது.
ஏற்கனவே அந்த வாலிபர், என்ஜினியரிங் படித்து வந்த ஒரு கிறிஸ்தவ மாணவியை கடத்தி சென்று கிறிஸ்தவ மதப்படி திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு குழந்தையும் உள்ளது. அந்த வாலிபர் கல்லூரி மாணவிகளை கடத்தி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வேலவதாஸ், வடிவேல் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதிகள், கடத்தப்பட்டதாக கூறப்படும் எம்.பி.பி.எஸ். மாணவியை போலீசார் மீட்டு 2 வாரத்துக்குள் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
Thanks To "Dailythanthi"
0 Comments: