
மணவை செய்திகள்
பழுதடைந்த நிலையில் மணவாளக்குறிச்சி – திருநயினார்குறிச்சி இணைப்பு பாலம்
பழுதடைந்த நிலையில்
மணவாளக்குறிச்சி – திருநயினார்குறிச்சி
இணைப்பு பாலம்
19-01-2013
மணவாளக்குறிச்சியில் இருந்து திருநயினார்குறிச்சிக்கு ஏலா வழியாக செல்லும் சாலையில் வள்ளியாற்றின் குறுக்கே பழமையான பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலம் என்று கூறப்படுகிறது. மணவாளக்குறிச்சியில் இருந்து பாலம் வழியே திருநயினார்குறிச்சி, குருந்தன்கோடு, வெள்ளிமலை, வெள்ளிச்சந்தை, மூங்கில்விளை உள்பட பல பகுதிகளுக்கு விரைவில் செல்லலாம். இதனால் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், பொதுமக்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
![]() |
பழுதடைந்த பாலத்தின் தோற்றம் |
தற்போது இந்த பாலம் மிகவும் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. பாலத்தில் ஆங்காங்கே கீறல் ஏற்பட்டு ஓட்டைகள் விழுந்து காணப்படுகிறது. பாலத்தின் பக்கசுவர்களில் சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து துருப்பிடித்த கம்பிகள் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் பாலம் வழியே செல்லும் வாகனங்கள் தட்டுதடுமாறி செல்கிறது. வாகன ஓட்டுநர்களும் பயத்துடனே பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் இந்த பாலம் விரைவில் சரிசெய்தால் மிகபயனுள்ளதாக இருக்கும் எனவும், இல்லையேல் மணவாளக்குறிச்சி பகுதிக்கு சென்றுவர, அம்மாண்டிவிளை பகுதியை கடந்துதான் செல்லவேண்டும் என்றும் கூறினர்.
![]() |
பக்கசுவரில் துருப்பிடித்த கம்பியின் தோற்றம் |
ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பாலத்தை சரிசெய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் இப்பகுதியினர் தெரிவித்தனர்.
![]() |
பாலத்தில் காணப்படும் ஓட்டைகள் |
0 Comments: