
சுற்றுவட்டார செய்திகள்
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி பேருந்தில் வடநாட்டு வாலிபர்கள் “ஓசி” யில் பயணமா?
மணவாளக்குறிச்சி பேருந்தில்
வடநாட்டு வாலிபர்கள் “ஓசி” யில் பயணமா?
07-01-2013
நாகர்கோவிலில் இருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் மணவாளக்குறிச்சி வழியாக குளச்சலுக்கு சென்று வருகின்றன. இதில் ஒருசில பேருந்துகள் மட்டும் மணவாளக்குறிச்சிக்கு வந்து செல்கின்றன.
இந்நிலையில் இன்று மாலை வேளையில் நாகர்கோவிலில் இருந்து மணவாளக்குறிச்சிக்கு பேருந்து ஓன்று வந்துகொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பயணம் செய்தனர். பேருந்து நடத்துநர் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து கொண்டுவந்தார். பேருந்து எறும்புகாடு பகுதிக்கு வரும்போது வடமாநில வாலிபர்கள் 3 பேர் ஏறினர்.
பேருந்து இராஜாக்கமங்கலம் வந்து, பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. அப்போது வடமாநில வாலிபர்கள் 3 பேரும் இராஜாக்கமங்கலத்தில் இறங்கினர். அதே நேரத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் இருவர் பேருந்தில் ஏற வந்தனர். உடனே பேருந்தை விட்டு இறங்கி சென்ற 3 வாலிபர்களிடமும் டிக்கெட் கேட்டனர்.
உடனே, அந்த 3 வாலிபர்களும் டிக்கெட், மற்றவர்களிடம் இருப்பதாக மாறிமாறி கூறினார். ஆனால் யாரிடமும் டிக்கெட் இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த டிக்கெட் பரிசோதகர்கள், வடமாநில வாலிபர்கள் மூவரும் ஓசியில் பயணம் செய்ததாக கருதி, டிக்கெட் பயண கட்டணத்தில் 10 மடங்கு பயணத்தொகையை வசூல் செய்தனர். வாலிபர்களும் பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
ஆனால், பேருந்தில் பயணம் செய்த ஒருசில பயணிகள், அந்த 3 வாலிபர்களும் டிக்கெட் எடுத்ததாகவும், டிக்கெட்டை தவறவிட்டதாகவும் கூறினர். இதனால் சிறிது நேரம் பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments: