.png)
ஐம்பது சதவீதம் பெண்கள்
05-01-2013
பெண்கள் வாகனம் ஓட்டுகிறார்கள். எங்காவது விபத்து நடந்ததுண்டா? ஒரே சமயத்தில் ஒரே
ஒரு வேலையை மட்டும் செய்து முடிப்பதில் ஆண்கள் மிக மிக திறமை சாலிகள் என்றால், ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிப்பதில் பெண்கள் மிகச் சிறந்தவர்கள். ஆண்கள் தங்கள் ஒரு வேலையை மட்டும்தான் கவனிபà ��பார்கள். ஆனால் பெண்களோ வெளி வேலைகளுக்கும் செல்வார்கள். குடும்பத்திலும் ஒரு மனைவியாக, அம்மாவாக, குடும்பத் தலைவியாக, பாட்டியாக, சமையல் காரியாக, துணி துவைப்பவளாக, வீட்டை சுத்தமாக வைத்திருத்தல் குடும்ப செலவுகளை நிர்ணயித்தல் என பல வேலைகளை ஒரே சமயத்தில் திறமையாக செய்து முடிக்கிறார்கள்.
வீட்டில் ஆண்-பெண், அம்மா-அப்பா, பாட்டி-தாத்தா, அண்ணன்-அக்கா, தம்பி-தங்கை என சரிபாதியாக உள்ளார்கள். நம் நாட்டில் மக்கள் தொகையிலும் பெண்கள் சரி பாதியாக உள்ளார்கள். இந்நிலையில் அரசியல் பொறுப்புகளிலும் பெண்கள் சரி பாதியாக ஏன் வரக்கூடாது? நிச்சயமாக வரவேண்டும். குடும்பத்தை சிறப்பாக நடத்தும் பெண்கள், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டும் பெண்கள், அரசிய�® �் அதிகாரங்களிலும் சரிபாதியாக இருந்தால்தான் நாட்டையும் சிறப்பாக வெற்றிப்பாதையில் கொண்டு செல்லமுடியும்.
நம் நாட்டில் ஜனாதிபதி ஒரு பெண்ணாக இருந்தால், பிரதமர் ஒரு ஆண் ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர் ஒரு பெண்ணாக இருந்தால் கவர்னர் ஒரு ஆணாக இருக்க வேண்டும். ஊராட்சித் தலைவர் ஒரு பெண்ணாக இருந்தால் செயல் அலுவலர் (E.O) ஒரு ஆணாக இருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தின் கலெக்டர் ஒரு ஆணாக இருந்தால் எஸ்.பி ஒரு பெண்ணாக இரு க்க வேண்டும். இவ்வாறு பெண்கள் ஒவ்வொரு அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் சரிபாதியாக இருந்தால் தான், அரசு இயந்திரம் முதலாக அனைத்து வேலைகளும் சிறப்பாக செயல்படும்.
நம் இந்திய நாட்டின் பாராளுமன்றத்திலும் ஒவ்வொரு மாநில சட்ட சபைகளிலும் சரி பாதி (50%) பெண்கள் அமர வேண்டும்என்ற நோக்கத்துடன் செயல்படும் கட்சிதான் இந்தியன்ஸ்விக்டரிகட்சி. எனவே விக்டரிகட்சியில் இணைந்து அனைத்து அரசியல் பொறுப்புகளிலும் ஐம்பது சதவீதம் பெண்கள் அமருமாறு அன்புடன் அழà ��க்கிறேன்.
வீட்டை ஆளும் பெண்ணே நாட்டை ஆழ வா!
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது, அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது.
J. Shalin Richard, B.Tech (Aero)
General Secretary
Contact Us: generalsecretary@indianvictoryparty.com
0 Comments: