
Announcements
District News
ஓடும் பஸ்ஸில் ஸ்டுடியோ அதிபர் சாவு
ஓடும் பஸ்ஸில் ஸ்டுடியோ அதிபர் சாவு
09-01-2013
தக்கலை பகுதியை சேர்ந்தவர் உசேன் (வயது 45). இவர் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் ஸ்டுடியோ வைத்துள்ளார். இது தொடர்பாக இவர் அடிக்கடி நாகர்கோவிலுக்கு சென்று வருவார்.
இந்நிலையில் நேற்று மாலை இவர், நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தக்கலைக்கு பேருந்தில் புறப்பட்டார். அந்த பேருந்து வெட்டூர்ணிமடம் அருகே வந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே உசேன், இதுபற்றி கண்டக்டரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து பஸ்சை நிறுத்தி அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுபற்றி தகவல் அறிந்ததும், அவரின் உறவினர்கள் வந்து உடலை பெற்று சென்றனர்.
0 Comments: