
மணவாளக்குறிச்சியில் குடியரசு தினவிழா
26-01-2013
இந்திய திருநாட்டின் 64-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதேபோல் மணவாளக்குறிச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
![]() |
முஸ்லிம் முஹல்ல செயலாளர் நூருல் அமீன் தேசியக்கொடி ஏற்றிவைத்த காட்சி |
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இன்று காலை 9 மணி அளவில் தேசிய கொடியை மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல செயலாளர் நூருல் அமீன் ஏற்றிவைத்தார். அப்போது மணவாளக்குறிச்சி பள்ளிவாசல் இமாம் ஜலீல் உஸ்மானி, பாடகர் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![]() |
குடியரசு தின சிறப்பு குறித்து நூருல் அமீன் பேசிய காட்சி |
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். குடியரசு தின சிறப்பு குறித்து முஹல்ல செயலாளர் நூருல் அமீன் பேசினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
![]() |
குடியரசுதின விழாவில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர் |
![]() |
இனிப்பு வழங்கப்பட்ட காட்சி |
0 Comments: