
குமரிமாவட்ட செய்திகள்
சுற்றுவட்டார செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி இளம்பெண் - சிறுமி பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி இளம்பெண் - சிறுமி பலி
15-01-2013
திங்கள்நகர் அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 37). இவரது மனைவி சித்ரா (31). ஸ்ரீகுமார் தனது மனைவி மற்றும் மகன் ஆலன்சாரோன் (5), மற்றும் உறவினர் மகள் லிபிசா (13) ஆகியோரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பொங்கல் பண்டிகையை யொட்டி புத்தாடைகள் எடுப்பதற்காக நாகர்கோவிலுக்கு வந்தனர்.
பார்வதிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தபோது பின்னால் வந்த மணல் லாரி ஸ்ரீகுமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ஸ்ரீகுமார், அவரது மனைவி சித்ரா, மகன் ஆலன்சாரோன், உறவினர் மகள் லிபிசா ஆகிய 4 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் சித்ராவும், லிபிசாவும் லாரியின் அடியில் சிக்கினர். அப்போது லாரியின் சக்கரம் சித்ராவின் தலைமீது ஏறியது. இதில் அவர் மூளை சிதறி சம்பவ இடத்தில் பலியானார். லிபிசாவும் படுகாயம் அடைந்தார். அவரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீகுமார் ஆலன்சாரோன் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த சித்ரா, லிபிசாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்தினால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
போலீசார் அதை சரி செய்தனர். இது குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நெய்யாற்றின்கரையை சேர்ந்த ஜெயசந்திரனை கைது செய்தனர்.
0 Comments: