
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி, சின்னவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
மணவாளக்குறிச்சி, சின்னவிளை
புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
25-12-2012
மணவாளக்குறிச்சி, சின்னவிளையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
![]() |
St. Antony Church, Cinnavilai, Manavalakurichi. |
நேற்று இரவு 11 மணி அளவில் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். இரவு நேர சிறப்பு ஜெபத்தை அருட்தந்தை பெஞ்சமின் போஸ்கோ மற்றும் அருட்தந்தை அகஸ்டின் பீட்டர் ஆகியோர் நடத்தினர்.
![]() |
சின்னவிளை ஆலயம் இரவு நேரத்தில் ஜொலிக்கும் காட்சி |
![]() |
கிறிஸ்துமஸ் சிறப்பு ஜெபத்தில் கலந்து கொண்டவர்கள் |
கிறிஸ்துமஸ் பிரார்த்தனை இரவு சுமார் 1.30 மணி அளவில் நடந்தது. தொடர்ந்து செண்டைமேளம் மற்றும் சிங்காரிமேள நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஒருவரைக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர்.
![]() |
செண்டைமேள காட்சி நடந்த காட்சி |
![]() |
வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம் |
0 Comments: