
குமரிமாவட்ட செய்திகள்
பாலப்பள்ளம் மற்றும் கருங்கல் பகுதியில் கிறிஸ்துமஸ் பிரமாண்ட குடில்கள்
பாலப்பள்ளம் மற்றும் கருங்கல் பகுதியில்
கிறிஸ்துமஸ் பிரமாண்ட குடில்கள்
25-12-2012
பாலப்பள்ளம் வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜீவன் சேரிட்டி சார்பில் 14-வது ஆண்டாக கிறிஸ்துமஸ் குடில் வைக்கப்பட்டுள்ளது. பாலப்பள்ளம் சந்திப்பில் இந்த குடில் ரூ.15 லட்சம் செலவில் பெங்களூர் அரண்மனை வடிவில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. 45 நாட்கள் மிகவும் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரண்மனை குடில் 72 அடி உயரமும், 43 அடி நீளமும் கொண்டது.
![]() |
பாலப்பள்ளம் கிறிஸ்துமஸ் குடில் |
குடிலுக்கு உள்ளே பைபிள் வரலாற்றை விளக்கும் வகையில் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பிரமாண்ட குடிலை தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயரும், சி.எஸ்.ஐ.பேராய பிஷப்புமான தேவகடாட்சம் திறந்து வைத்தார். கிறிஸ்துமஸ் குடிலை அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர். நிகழ்ச்சியை முன்னிட்டு சிலம்பாட்டம், சிங்காரிமேளம் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
கருங்கல் கிறிஸ்துமஸ் குடில்:
கருங்கல் இளைஞர் ஒருங்கிணைப்பு சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை டோமினிக் சாவியோ ஜெபம் செய்தார். ஜாண் ஜேக்கப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
![]() |
கருங்கல் கிறிஸ்துமஸ் குடில் |
இந்த கிறிஸ்துமஸ் குடில் சுமார் 30 அடி உயரமும், 30 அடி அகலத்தில் ரஷியாவில் உள்ள புனித சவேரியார் ஆலயம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. குடிலில் உள்பகுதியில் இயேசு பிறந்த மாட்டுதொழுவம், ஏரோது மன்னன அரண்மனை, ஏதேன் தோட்டம் போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த குடிலையும் ஏராளமான பொதுமக்கள் இரவு மற்றும் பகல் வேளையில் பார்த்து செல்கின்றனர்.
0 Comments: