
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு அருகே கார் மீது பைக் மோதி விபத்து வாலிபர் படுகாயம்
மண்டைக்காடு அருகே கார் மீது பைக் மோதி விபத்து
வாலிபர் படுகாயம்
30-12-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று காலை 10 மணி அளவில் பெரியவிளையில் இருந்து குளச்சல் நோக்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
![]() |
முன்பகுதி நொறுங்கிய கார் |
அப்போது குளச்சலில் இருந்து நாகர்கோவிலை நோக்கி நாகர்கோவிலை சேர்ந்த கார் ஓன்று வந்து கொண்டிருந்தது. இந்த வாகனம் மண்டைக்காடு அருகே உள்ள வெட்டுமடை பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் கார் மீது ஆக்ரோசமாக மோதியது.
![]() |
தூக்கிவீசப்பட்ட பைக் |
இதில் இருசக்கர வாகனத்துடன் அந்த நபர் தூக்கி வீசப்பட்டு புதருக்குள் விழுந்தார். தூக்கி வீசப்பட்ட நபர் படுகாயம் அடைந்தார். மேலும் அவர் வந்த இருசக்கர வாகனமும் மிகுந்த சேதம் அடைந்தது. காரின் முன் பகுதியும் நொறுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
செய்தி மற்றும் போட்டோ "பெரோஸ்கான்" (கார் டிரைவர்)
மணவாளக்குறிச்சி
0 Comments: