
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே தம்பிக்கு அரிவாள் வெட்டு - அண்ணனுக்கு வலைவீச்சு
மணவாளக்குறிச்சி அருகே தம்பிக்கு அரிவாள் வெட்டு
அண்ணனுக்கு வலைவீச்சு
30-12-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி கடைவிளை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 52). மரப்பட்டறை வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இவருடைய அண்ணன் அமல்ராஜ் (வயது 65) வீடு உள்ளது. தர்மராஜ் வீட்டின் தூசி அமல்ராஜ் வீட்டில் விழுவதாக கூறி அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்றும் இது தொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அமல்ராஜ் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்று தர்மராஜை தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தர்மராஜ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து அமல்ராஜ் மற்றும் மகள் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
0 Comments: