
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி சின்னவிளையில் மீனவர்கள் கோஷ்டி மோதல்
மணவாளக்குறிச்சி சின்னவிளையில்
மீனவர்கள் கோஷ்டி மோதல்
26-12-2012
மணவாளக்குறிச்சி சின்னவிளை குருசுபாறை அருகில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் விழா வழுக்குமரம் போட்டி உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அது போல் நேற்று கட்டுமரம் போட்டியும் நடைபெற்றது.
![]() |
கோஷ்டி மோதலை தொடர்ந்து சின்னவிளை மீனவர்கள் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி |
இந்த போட்டியை மீனவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வந்தனர். இதில் புதூர், பெரியவிளை, சின்னவிளை மற்றும் கடியப்பட்டணம் மீனவர்கள் பங்கு பெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்று இங்கு போட்டிகள் தொடங்கியது.
இந்நிலையில் மாலை 4 மணி அளவில் புதூர் மீனவர்களுக்கும், பெரியவிளை மீனவர்களுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சின்னவிளை மீனவர்கள் தலையிட்டு, சமாதானம் செய்து வைத்தனர்.
![]() |
இளைஞர்கள் ஆடிய பாடிய இடம் வெறுச்சோடி கிடக்கிறது |
இதை தொடர்ந்து சின்னவிளை மீனவர்களுக்கும், புதூர் மீனவர்களுக்கும் மீண்டும் தகராறு உருவாக்கி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
![]() |
காவலுக்கு வந்த போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் |
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) அன்வர்ஷா, மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் புதூர் மீனவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
![]() |
கோஷ்டி மோதலை தொடர்ந்து கடற்கரையை விட்டு வெளியேறும் மக்கள் |
இதைதொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 Comments: