
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி சின்னவிளை கடலில் வள்ளம் கவிழ்ந்தது; தத்தளித்த 15 பேரை மீனவர்கள் காப்பாற்றினர்
மணவாளக்குறிச்சி சின்னவிளை கடலில் வள்ளம் கவிழ்ந்தது;
தத்தளித்த 15 பேரை மீனவர்கள் காப்பாற்றினர்
26-12-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை கடலில் நேற்று மாலை 15 பேர் கடலுக்கு செல்ல வேண்டும் என்று ஒரு மீனவரிடம் கூறினர். அவரும் அந்த 15 பேரை வள்ளத்தில் ஏற்றிக் கொண்டு கடலுக்கு சென்றார். கடலில் சிறிதுதூரம் சென்றதும் வள்ளம் திடீரென கவிழ்ந்தது. இதில் குழந்தைகள் உள்பட 15 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர்.
கடலில் மூழ்கி உயிருக்கு போராடியவர்களை கரையில் நின்ற மீனவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் 25 வள்ளங்களில் புறப்பட்டு சென்று கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர். உயிர்பிழைத்தவர்கள் தங்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் கடலில் மூழ்கியதால் அதிர்ச்சியில் இருந்த குழந்தைகள் உள்பட சிலரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இதில் வள்ளத்தில் இருந்த ஒரு பெண் கடலில் தத்தளித்த போது அவரது 5 பவுன் தங்கச்சங்கிலி கடலுக்குள் மூழ்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments: