
District News
குளச்சல் (இனயம்) வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்
குளச்சல் (இனயம்) வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் ரெயில் நிலையம் முன்பு நேற்று பா.ஜனதா சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதற்கு பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணவ– மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து பெறப்பட்டது.
0 Comments: