
Manavai News
மணவாளக்குறிச்சி, சின்னவிளையை சேர்ந்தவருக்கு அரிவாள் வெட்டு
மணவாளக்குறிச்சி, சின்னவிளையை சேர்ந்தவருக்கு அரிவாள் வெட்டு
மணவாளக்குறிச்சி அருகே சின்னவிளையை சேர்ந்தவர் சகாயவில்சன் (வயது 43), அதே பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (33). மீனவர்களான இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சகாயவில்சன் கடியபட்டிணத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சுபாஷ் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சகாயவில்சன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: