
District News
குமரி மாவட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஆய்வு
குமரி மாவட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஆய்வு
11-01-2016
மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை, விமான போக்குவரத்து துறை இணை மந்திரி மகேஷ் சர்மா நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, மேம்படுத்துவதற்காக வந்தார். கன்னியாகுமரியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு பணிகளும் முடிவடைந்துள்ளன. ஆன்மிக தலங்களான வேளாங்கண்ணி, ராமேசுவரம் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்படும். விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஒரு விமான நிலையத்துக்கும், இன்னொரு விமான நிலையத்துக்கும் இடையே 150 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் குமரி மாவட்டத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விமான நிலையம் உள்ளது.
ஆனாலும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாதலமாக உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இங்கு விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்ய இருக்கிறேன். சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்தில் விமான நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
குமரி முனையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே கடல்வழி பாலம் அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு மத்திய மந்திரி மகேஷ் சர்மா கூறினார். பேட்டியின்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
0 Comments: