
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிமலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
வெள்ளிமலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
19-08-2015
வெள்ளிமலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வினியோகம் நடந்தது. பேரணி அரசு மேல்நிலைப்பள்ளி அம்மாண்டிவிளையில் இருந்து பிலாவிளை வழியாக அம்மாண்டிவிளை சந்திப்பு வரை தலைவர் வசந்தா தலைமையிலும், செயல் அலுவலர் ருக்மணி, துணைத் தலைவர் சிவதாணுலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் ஆல்பர்ட், துணைத் தலைமை ஆசிரியர் கஸ்தூரி தங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஜேசு தங்கம், ஜெயந்தி, மேரி ஜெசிந்தாம்மாள், மகேஷ்வரி, கீதா, சுஜாரேஸ் ரெக்சலின் மற்றும் மாணவ, மாணவிகள், 10–வது வார்டு உறுப்பினர் முருகன், 11–வது வார்டு உறுப்பினர் சிவகுமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.
0 Comments: