
Manavai News
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய விழா 21-ம் தேதி தொடக்கம்
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய விழா 21-ம் தேதி தொடக்கம்
16-08-2015
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய விழா 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் விழாவான 21-ம் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை நிகழ்வும், மாலை 6.30 மணிக்கு ஆலயத்தில் திருக்கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடைபெறுகிறது.
23-ம் தேதி விழாவில் இரவு 9 மணிக்கு கிரிஷ் கிரியேசன்ஸ் வழங்கும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடக்கிறது. 27-ம் தேதி விழாவில் இரவு 9-ம் சபை சங்க இயக்க ஆண்டு விழா நடைபெறுகிறது. 30-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கொடியிறக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் மியூசிக் மேக் வழங்கும் இன்னிசை விருந்து நடைபெறுகிறது.
ஆலய விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு நிர்வாகக்குழு, பங்கு தந்தை ஆன்றனி ஜெயா செய்து வருகின்றனர்.

0 Comments: