
State News
பிளாஸ்டிக் பைகளை விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்
பிளாஸ்டிக் பைகளை விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்
16-08-2015
தமிழகத்தில் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகள் 2011 என்ற அரசு விதிகள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. ஆனால் இந்தச் சட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சரிவர அமல்படுத்தவில்லை.
இந்நிலையில் அதற்கான அரசு விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் மேலாண்மை விதியின்படி, 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்க முடியும். எனவே கடைகளில் அதிகாரிகள் சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

0 Comments: