
Manavai News
மணவாளக்குறிச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
மணவாளக்குறிச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
17-08-2015
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. காலை 9 மணி அளவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில், மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் சுகுமாரன் தேசிய கொடியேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
போட்டோஸ்
பெரோஸ் கான்
மணவாளக்குறிச்சி
0 Comments: