District News
தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்கும் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்கும் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம்
15-07-2015
தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் பங்கேற்கும் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம் 27-ம் தேதி காலை 10 மணி முதல் 29-ம் தேதி காலை 10 மணி வரை சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெறுகிறது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநில தலைவர் உமாராணி தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி துவக்கவுரையும், பொதுசெயலாளர் கனகராஜ் விளக்கவுரையும், அரசு ஊழியர் சங்க பொதுசெயலாளர் பாலசுப்பிரமணியன் நிறைவுரையும் வழங்குகின்றனர்.
மாநில நிர்வாகிகளான தனுஷ்கோடி, இராஜேந்திரன், முத்துரர்மலிங்கம், ஷாஜன் மேத்யூ, ஜோதிபாசு, மகாலிங்கம், சம்பத்குமார், ராஜு, ஸ்ரீரவிக்குமார், மோகன், கலாசாமி ஆகியோர் விளக்கவுரை வழங்குகின்றனர். மாநில பொருளாளர் பாலமுருகன் நன்றியுரை வழங்குகின்றார்.
உண்ணாவிரத போராட்டம் 2923 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஊழியர்களில் வழக்கு தொடர்ந்த மற்றும் வழக்கு தொடராத அனைத்து ஊழியர்களுக்கும் முன் தேதியிட்டு ஊதிய ஆணை வழங்கவும், அனைத்து நிலை பணிமூப்பு பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிடவும், கணினி இயக்குபவர் பணியிட ஊழியர்களை ஈர்த்து கொள்ளவும், பேரூராட்சிக்கு இணையான வருமானம் உள்ள ஊராட்சிகளை தரம் உயர்த்தவும் உள்ளிட்ட 42 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடத்தப்படுகிறது.
செய்தி
பி.எஸ்.கே.
மணவாளக்குறிச்சி
0 Comments: