Headlines
Loading...
மணவாளக்குறிச்சி சின்னவிளை, ஆசாரிதெரு பக்கச்சாலைகள் செப்பனிடப்பட்டன

மணவாளக்குறிச்சி சின்னவிளை, ஆசாரிதெரு பக்கச்சாலைகள் செப்பனிடப்பட்டன

மணவாளக்குறிச்சி சின்னவிளை, ஆசாரிதெரு பக்கச்சாலைகள் செப்பனிடப்பட்டன
15-07-2015
மணவாளக்குறிச்சிகுட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் மோசமானதாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக மணவாளக்குறிச்சி ஜங்ஷன் பகுதியில் இருந்து வடக்கன்பாகம், சக்கப்பத்து செல்லும் சாலை, சின்னவிளை செல்லும் சாலை, தருவை செல்லும் சாலை ஆகியன மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன.
ஆசாரிதெரு சாலை செப்பனிடப்படுகிறது
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னவிளை செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களை மட்டும் நிரப்பி தார்சாலை போடப்பட்டது. 
சின்னவிளை செல்லும் சாலை சரிசெய்யப்படுகிறது
அதேபோல் நேற்று முன்தினம் ஆசாரிதெரு சாலையில் உள்ள பள்ளங்களை மட்டும் நிரப்பி தார்சாலை போடப்பட்டுள்ளது. சாலையில் உள்ள பள்ளங்கள் அடைக்கப்பட்டு செப்பனிடப்பட்டதால் சாலை ஓரளவு நல்லமுறையில் உள்ளது.




News and Photo
Dyson, M.A., B.Ed., M.Phil.
Special Reporter
Manavalakurichi

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: