சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே கடலில் குதித்த பெண் அடையாளம் தெரிந்தது
மணவாளக்குறிச்சி அருகே கடலில் குதித்த பெண் அடையாளம் தெரிந்தது
21-07-2015
மணவாளக்குறிச்சி அருகே கூட்டுமங்கலம் கடற்கரையில் நேற்றுமுன்தினம் 57 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி தாரணி, குளச்சல் கடலோர காவல்படை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது, இறந்தவர் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சரசம்மாள் (வயது57) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த பல நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்தார். பல இடங்களில் சிகிச்சை எடுத்தும் பலன்கிடைக்கவில்லை. இதனால், மனமுடைந்த சரசம்மாள் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கண்ட விவரங்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, சரசம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 Comments: