Manavai News
மணவாளக்குறிச்சியில் இரவு நேரத்தில் ஒற்றை முகப்பு விளக்குடன் ஓடும் அரசு பேருந்து
மணவாளக்குறிச்சியில் இரவு நேரத்தில் ஒற்றை முகப்பு விளக்குடன் ஓடும் அரசு பேருந்து
25-07-2015
குமரி மாவட்டத்தில் மிகமுக்கிய ஊர்களில் ஒன்றாக இருப்பது மணவாளக்குறிச்சி. இந்த பகுதியில் தினந்தோறும் ஏராளமான அரசு பேருந்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மணவாளக்குறிச்சியில் இருந்து திங்கள்நகர் வழியாக தக்கலைக்கு தினமும் அரை மணிநேர இடைவெளியில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தனியார் மினி பேருந்துகள் இயங்கிவருகின்றன.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மணவாளக்குறிச்சி – தக்கலை பேருந்து ஒன்று இரவு நேரத்தில் ஒற்றை முகப்பு விளக்குடன் வந்து செல்வதை காணமுடிகிறது. ஏற்கனவே சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியும் காணப்படுவதாலும், குமரி மாவட்டத்தில் இயங்கும் பழுதடைந்த பேருந்துகளாலும் விபத்து நிகழ்வதற்கு குறைவொன்றுமில்லை. இதில் ஒரு முகப்பு விளக்குடன் வரும் பேருந்தை இரு சக்கர வாகன ஓட்டிகள் காணும்போது ஏதோ எதிரேயும் இரு சக்கர வாகனம்தான் வருகிறது என்ற எண்ணத்தை ஏற்பட செய்யும். இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சுமார் இரு வாரங்களாக இயங்கும் இந்த பேருந்தை சரிசெய்ய ஊழியர்களும் முன்வரவில்லை என்றே தெரிகிறது. குமரி மாவட்டத்தில் பழுதடைந்த பேருந்துகள்தான் அதிகமாக ஓடுகிறது. அதிலும் குறிப்பாக மிகவும் மோசமாக பேருந்துகள் மணவாளக்குறிச்சி – தக்கலை வழித்தடத்தில் ஓடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.
0 Comments: