Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் மரணம்
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் மரணம்
12-07-2015
மணவாளக்குறிச்சி ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகன் மைக்கேல் ஆன்றனி (பிரின்ஸ்)(வயது 42). இவர் குவைத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு 10-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி வந்ததாக தெரிகிறது. இதனால் மைக்கேல் ஆன்றனி குவைத்தில் வைத்து மரணம் அடைந்ததாக தெரிகிறது.
இறந்த அவரது உடல் சொந்த ஊர் கொண்டுவர ஒருவார காலம் ஆகும் எனக் கூறப்படுகிறது. அவரது உடல் கொண்டுவரப்பட்டு, மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம்பத்தி நாதர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்து, அங்குள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்படும் எனக்கூறப்படுகிறது.
மைக்கேல் ஆன்றனிக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தற்போது இவர்கள் நாகர்கோவில் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
தகவல்
டைசன், மணவாளக்குறிச்சி.
0 Comments: