Headlines
Loading...
விசைப்படகில் கியாஸ் கசிந்து குமரி மீனவர் மூச்சுதிணறி பலி

விசைப்படகில் கியாஸ் கசிந்து குமரி மீனவர் மூச்சுதிணறி பலி

விசைப்படகில் கியாஸ் கசிந்து குமரி மீனவர் மூச்சுதிணறி பலி
05-07-2015
கொல்லங்கோடு அருகே வள்ளவிளை சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிபிள்ளை. இவருடைய மகன் மைக்கேல் (வயது 35), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு சொந்தமான விசைப்படகு கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, கொச்சி பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், படகை கரைப்பகுதிக்கு கொண்டு வந்து பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை பார்வையிடுவதற்காக நேற்று மைக்கேல் கொச்சிக்கு சென்றார்.

படகில் மீன்களை பதப்படுத்தி வைப்பதற்காக பெரிய அளவில் குளிர்சாதன அறை அமைந்திருப்பார்கள். அந்த அறையில் குளிரூட்டும் கியாஸ் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் இவரது படகில் உள்ள குளிர்சாதன அறைக்கு கியாஸ் தேவைப்பட்டதாக தெரிகிறது. இதனால், இவர் கியாஸ் சிலிண்டர் எடுப்பதற்காக அருகில் உள்ள இன்னொரு விசைப்படகின் குளிர்சாதன அறைக்குள் சென்றார்.

அந்த படகில் உள்ள அறையில் கியாஸ் கசிந்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. மைக்கேல் உள்ளே சென்றதும் கியாஸ் சிலிண்டரில் இருந்து வந்த நச்சுவாயு தாக்கி, அவர் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, மைக்கேல் உடலை மீட்டனர். இறந்த மீனவர் மைக்கேலுக்கு சர்மி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: