
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல் துறைமுகம் மேம்படுத்தப்பட்டால் தமிழகம் பயன்பெறும்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
குளச்சல் துறைமுகம் மேம்படுத்தப்பட்டால் தமிழகம் பயன்பெறும்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
16-05-2015
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது. குறிப்பாக குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். குளச்சல் துறைமுகம் மேம்படுத்தப்பட்டால் ஒட்டு மொத்த தமிழகமும் பயன்பெறும். ஏற்கனவே, சென்னை, எண்ணூர், தூத்துக்குடியில் துறைமுகங்கள் இருந்தாலும்கூட குளச்சல் துறைமுகம் மேம்படுத்தப்பட்டால் இந்தியாவில் உள்ள மற்ற துறைமுகங்களைவிட மிகப்பெரிய பலனை நாட்டிற்கு கொடுக்க முடியும். எனவே, இதற்கு ஒப்புதல்தர தமிழக அரசை கேட்டுள்ளோம்.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதி நாட்டின் சுற்றுலா பகுதியை கொண்டதாகும். காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் முதல் குமரிவரை இந்து கோவில்கள், தேவாலயங்கள், நாகூர் தர்கா, 3 துறைமுகங்கள் என சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றினால் கடற்கரையோரம் உள்ள 13 கிழக்கு மாவட்டங்கள் பெரும் முன்னேற்றம் அடையும்.
மேலும் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ரெயில்வே நிலையங்களை வடக்கு-தெற்கு பகுதிகளுடன் இணைத்தால் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். விசாகப்பட்டினம்-சென்னை வரை உள்ள திட்டங்களை குமரிவரை நீட்டினால் மிகுந்த பயன் அளிக்கும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் பெற்றுத்தர தயாராக இருக்கிறோம்” என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
0 Comments: