
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சலில் நெத்திலி மீன் சீசன் தொடங்கியது மீனவர்கள் மகிழ்ச்சி
குளச்சலில் நெத்திலி மீன் சீசன் தொடங்கியது மீனவர்கள் மகிழ்ச்சி
16-05-2015
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதலமாக கொண்டு 300 விசைப்படகுகள் இயங்கி வருகிறது. மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடல் பகுதிக்கு சென்று கனவாய், கேரைமீன், நவரை, நாக்கண்டம் உள்பட மீன்களை பிடித்து கரைக்கு திரும்புகின்றனர். பின்னர் இந்த மீன்களை குளச்சல் கடற்கரையில் உள்ள ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏலக்கூடத்திற்கு வந்து ஏலம் எடுத்து செல்கிறார்கள்.
இந்நிலையில் குளச்சலில் சில தினங்களுக்கு முன் நெத்திலி மீன் சீசன் தொடங்கியது. நேற்று அதிகாலை கட்டுமரம் மற்றும் பைபர் வள்ளங்களில் குளச்சல், கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, குறும்பனை, வாணியக்குடி உள்பட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது அவர்களது வலையில் நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைத்தது. தொடர்ந்து கடற்கரை திரும்பிய மீனவர்கள் கடற்கரையில், மீன்களை வலையில் இருந்து பிரித்தெடுத்து ஏலக்கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்றனர். வியாபாரிகள் நெத்திலி மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர். நெத்திலி மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments: