
Manavai News
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் பணி காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்: தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் பணி காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்: தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்
27-04-2015
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் பணி காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் உள்ள தொழிற்சங்க கட்டிடத்தில், கன்னியாகுமரி ஜில்லா மினரல் ஒர்க்கர்ஸ், ஸ்டாப் யூனியன் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் தாம்ஸன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதன்படி தலைவராக தாம்ஸன், துணைத்தலைவர்களாக சின்னநாடார், மனோகரன் நாயர், இளங்கோ, தாம்டிக்சன், பொதுச்செயலாளராக முருகேசன், செயலாளர்களாக பால்ராஜ், ராஜன் பாஸ்கரதாஸ், செல்வராஜ், அய்யப்பன், பொருளாளராக ஜான்சன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இந்த தொழிற்சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மணல் ஆலைக்கு தேவையான கச்சா மணல் எடுப்பதற்கு நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் பணி காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்கவும், காலி பணியிடங்கள் நிரப்பப்படும்போது மற்ற பிரிவுகளில் உள்ள தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், மணல் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் மோனசைட்டுக்கு தகுந்த விலை நிர்ணயம் செய்யவும், உற்பத்தி ஊக்கத்தொகையை கணக்கில் கொண்டு வர நிர்வாகத்தை வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments: