
Manavai News
மணவாளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் விளக்க தெருமுனை கூட்டம்
மணவாளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் விளக்க தெருமுனை கூட்டம்
11-04-2015
மணவாளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் விளக்க தெருமுனை கூட்டம் இன்று மாலையில் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இதில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், அப்பாவி விவசாயிகளின் நிலங்களை முதலாளிகளுக்கு எடுத்து கொடுக்கும் நோக்கில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கண்டித்தும், மீனவர்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் டாக்டர் மீனாகுமாரியின் அறிக்கையை கண்டித்தும், பா.ஜ.க-வின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பேசப்பட்டது.
இதில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பேசினார். மேலும் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் லாரன்ஸ், ஸ்ரீகுமார், வழக்கறிஞர் தனிஸ்லாஸ், வழக்கறிஞர் சவுந்தர், சேவியர் சுந்தர்ராஜ், முத்துக்குமார், தங்கராஜ், அம்மாண்டிவிளை செல்லப்பிள்ளை, கடிகை ராஜ்குமார், ராஜன் தனிஷ், குற்றாலம், மணி உள்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
“புதிய புயல்” முருகன்
மணவாளக்குறிச்சி
0 Comments: