
Manavai News
மணவாளக்குறிச்சி, சின்னவிளையில் மீனவர் ஒய்வு அறை அடிக்கல் நாட்டு விழா: பிரின்ஸ் எம்எல்ஏ கலந்து கொண்டார்
மணவாளக்குறிச்சி, சின்னவிளையில் மீனவர் ஒய்வு அறை அடிக்கல் நாட்டு விழா: பிரின்ஸ் எம்எல்ஏ கலந்து கொண்டார்
28-04-2015
மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட சின்னவிளை பகுதியில் மீனவர் ஒய்வு அறை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மணவாளக்குறிச்சி பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எட்வின் ஜோஸ் தலைமை தாங்கினார். பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமார் முன்னிலை வகித்தார். குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கலந்து கொண்டு மீனவர் ஒய்வு அறைக்கான அடிக்கல் நாட்டினார்.
மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா, சின்னவிளை பங்கு தந்தை பெஞ்சமின், பங்கு பேரவை உறுப்பினர்கள் ஜெரால்டு, அந்திரியாஸ், சேவியர், ஜோசப்ராஜ், பிரான்சிஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் சேகர், லிவிங்ஸ்டன், மரியதாஸ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
அப்துல் ரஹீம்
மணவாளக்குறிச்சி
0 Comments: