
சுற்றுவட்டார செய்திகள்
முட்டம் சகல புனிதர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் நோய் கண்டறிதல் முகாம் நடந்தது
முட்டம் சகல புனிதர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் நோய் கண்டறிதல் முகாம் நடந்தது
15-03-2015
தேசிய அளவிலான குழந்தைகள் நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு திட்ட முகாம் முட்டம் சகல புனிதர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமிற்கு பொதுசுகாதாரத்துறையின் குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் டோம்னிக் சேவியோ முன்னிலை வகித்தார். டாக்டர் பிரதீஸ் பூருஸ் முகாமை நடத்தினார்.
முகாமில் பகுதி சுகாதார செவிலியர் குளோரி, கிராம சுகாதார செவிலியர் மேரி மற்றும் சுகாதார ஆய்வாளர் பத்திராஜ் ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். 600 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சில குழந்தைகளுக்கு நோய்கள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

0 Comments: