
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு கோவில் திருவிழா சமயமாநாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
மண்டைக்காடு கோவில் திருவிழா சமயமாநாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
15-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழாவின்போது 10 நாட்களும் சமயமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கும் மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற இந்து மாணவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் கந்தப்பன் தலைமை தாங்கினார். பழவிளை கல்லூரி முதல்வர் ஆதிசுவாமி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் முருகேஷ், அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மாவட்டங்களின் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் சீனிவாசகண்ணன், பா.ஜனதா மூத்ததலைவர் எம்.ஆர்.காந்தி, வைகுண்டராஜன், அழகிமணி, டாக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

தொடர்ந்து சொற்பொழிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
0 Comments: