
குமரிமாவட்ட செய்திகள்
சுரபி கல்வி மற்றும் சமூகமேம்பாட்டு அறக்கட்டளையின் முப்பெரும் விழா நடந்தது
சுரபி கல்வி மற்றும் சமூகமேம்பாட்டு அறக்கட்டளையின் முப்பெரும் விழா நடந்தது
15-02-2015
சுரபி கல்வி மற்றும் சமூகமேம்பாட்டு அறக்கட்டளயின் முப்பெரும் விழா நாகர்கோவில் கேப்ரோட்டில் அமைந்துள்ள ஆனந்தம் மஹாலில் வைத்து இன்று மாலையில் நடைபெற்றது. விழாவினை அறக்கட்டளை தலைவர் சுரபி எஸ்.செல்வராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. திருப்பூர் சுவாமிஜி தமிழ்பித்தன் ஆசியுரை வழங்கி பேசினார். நாகர்கோவில் நகர்மன்ற தலைவி மீனாதேவ், பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவி சத்யாதேவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தெய்வராஜ், திருநெல்வேலி மாவட்ட நீதிபதி கருப்பையா, அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி தாளாளர் மரியவிக்டர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் சாதனை படைத்தவர்களுக்கு “லூர்தம்மாள் சைமன்” விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து இலவச சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இடையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுரபி அறக்கட்டளை நிர்வாகக்குழு உறுப்பினர்களான குமார் (செயலாளர்), ஜெஸி (பொருளாளர்), பாலசுப்பிரமணியன், ஈனோஸ், மேரி கமலபாய், ராஜகோபால், ஜெயராணி, “மணவை இன்ஃபோ” எம்.எஸ்.சலீம், சனாதனன், முருகன், லலிதா, விஜயகுமார், நெல்சன், ராஜசேகர், சகாயநிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments: