
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கேரள பக்தர்கள் குவிந்தனர்: பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கேரள பக்தர்கள் குவிந்தனர்: பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்
16-02-2015
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருட திருவிழா வருகிற மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மார்ச் 10- ம் தேதி ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா தொடங்க இன்னும் 13 நாட்கள் உள்ளன. அதற்குள்ளே கோவிலுக்கு கேரள பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று கேரள பக்தர்கள் ஏராளமானோர் சுற்றுலா வாகனங்களில் கோவிலுக்கு வந்துகுவிந்தனர். அவர்கள் கடலில் நீராடிவிட்டு பொங்கலிட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி மாவட்டதின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
0 Comments: