
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் பக்தர்களை ஒழுங்குபடுத்த நிரந்தர தடுப்பு கம்பி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் பக்தர்களை ஒழுங்குபடுத்த நிரந்தர தடுப்பு கம்பி
21-02-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் பக்தர்களை ஒழுங்குபடுத்த நிரந்தர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 10-ம் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது. விழா நாட்களில் அதிக அளவில் வரும் பக்தர்களை ஒழுங்குபடுத்த மறக்கட்டையிலான தற்காலிக தடுப்பு அமைக்கப்படும்.
தற்போது மாசிக் கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்களை ஒழுங்குபடுத்த திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர துருப்பிடிக்காத இரும்பு கம்பியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசலில் தடுப்புகள் சேதமாவது தடுக்கப்படும். மேலும் கோவில் திருவிழா தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
0 Comments: